உள்ளூர் செய்திகள்

இம்மாதமே கடைசி!

12ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான கட்டணங்களை, வரும் 29ஆம் தேதிக்குள் செலுத்துமாறு, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளி மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை, 'ஆன்லைன்' வழியே, தேர்வுத்துறைக்குச் செலுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !