உள்ளூர் செய்திகள்

இந்தாண்டு நோபல் பரிசு

நார்வே: இயற்பியல், வேதியியல், மருத்துவ பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் யோஷினேரி ஓஷிமி பெறுகிறார். பழுதடைந்த உடல் செல்கள் தம்மைத் தாமே அழித்துக் கொண்டு, சுத்தம் செய்துகொள்ளும் 'ஆட்டோபேஜி' (Autophagy) துறையில் இவர் செய்த ஆய்வுகளுக்கு இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இயற்பியல் துறைக்கான விருதை பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் தெளலாஸ், டங்கன் ஹால்டேன், மைக்கேல் காஸ்டெர்லிட்ஸ் ஆகிய மூவர் பெறுகிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்களின் அசாதாரண நிலைப்பாடுகள் குறித்து, முக்கிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளனர். வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, மூலக்கூறுகள் பற்றிய புதிய கண்டுபிடிப்பிற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜான் பெர்ரி, அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரேசர், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் ஃபிரிஞ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா நாட்டு அதிபர், யுவான் மேனுவெல் சாண்டோஸுக்கு வழங்கப்படுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !