கோஹ்லிக்குக் கோப்பை
வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டி முடிவில் இந்திய அணி 2 - 0 என ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றி இருந்தது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த நான்காவது போட்டி மழையால் பாதிக்கப்பட போட்டி 'டிரா' ஆனது. இந்திய அணி கோப்பை வென்றாலும், டெஸ்டில் 'நம்பர் - 1' இடத்தை பாகிஸ்தானிடம் பறிகொடுத்தது.