வெற்றி விஜேந்தர்
இந்தியக் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங். கடந்த ஆண்டு தொழில்முறை குத்துச்சண்டை வீரராகப் போட்டிகளில் பங்கேற்றார். இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், தனது 4ஆவது போட்டியின்போது ஹங்கேரியின் 'அலெக்சாண்டர் ஹோர்வத்' என்பவருடன் மோதினார். ஆறு சுற்றுகள் கொண்ட போட்டியில், மூன்றாவது சுற்றின் இறுதியிலேயே, 'நாக் - அவுட்' முறையில் வென்றார் விஜேந்தர்.