உள்ளூர் செய்திகள்

வான்ன க்ரை வைரஸ் இந்திய கணினிகள் பாதிப்பு!

கணினி வழி சேவைகளை நிலைகுலைய வைக்கும் சைபர் தாக்குதல்கள், உலக அளவில் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில், 'வான்ன க்ரை' என்ற பிணைத்தொகை வைரஸ் (Ransomware) மூலம், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், இணைய தாக்கிகள் (ஹேக்கர்கள்) தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், உலக அளவில் இரண்டு லட்சம் கணினிகளும், இந்திய அளவில் 50 ஆயிரம் கணினிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பணத்தைக் குறிக்கோளாக வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில், ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், வங்கிகள் போன்றவை பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்தியாவின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பாதுகாப்பு அம்சங்கள் காலாவதியான இயக்க முறைமையை (Operating System) பயன்படுத்துவது, இணைய தாக்குதல் நடத்துபவர்களுக்கு எளிதாக உள்ளதாக, கணினி பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !