எச்சரிக்கும் வரைபடம்!
இயற்கைப் பேரிடர்களின்போது, பாதுகாப்பான மாற்று வழியைக் காட்டும் அம்சம், கூகுள் மேப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. புயலின் பாதை, வெள்ளப் பாதிப்பு பகுதி போன்றவற்றைத் தேடும்போது, கூகுள், பயனருக்கு அதுபற்றிய காட்சி வரைபடங்களைக் காட்டும். முதற்கட்டமாக, பாட்னா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை காட்சியாகக் காட்டும் வசதி அறிமுகமாகியுள்ளது.