எண்கள் சொல்லுவது என்ன?
சூப்பர் மார்க்கெட்களில் விற்கப்படும் பழங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பழம் விளைந்த நாடு, உற்பத்தியாளர் பற்றிய விவரங்கள் அதில் இருக்கும். அந்த ஸ்டிக்கரில் எண்களும் காணப்படுமே, அவை எதைக் குறிக்கின்றன?நான்கு இலக்கம் இருந்து, முதல் இலக்கம் 4 என்று இருந்தால், அந்தப் பழத்தில் பூச்சிமருந்து தெளிக்கப்பட்டுள்ளது என்று பொருள். ஐந்து இலக்கங்கள் இருந்து முதல் இலக்கம் 9 என்று இருந்தால், அது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது. ஐந்து இலக்கத்தில் முதல் இலக்கம் 8 என இருந்தால், அது மரபணு மாற்றப்பட்டு விளைந்தது என்று பொருள்.