உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?

இன்றைய மாணவர்கள் எப்படிப்பட்ட ஆசிரியர்களை விரும்புகின்றனர்? கடுமையான ஆசானையா அல்லது நட்பாக இருக்கும் தோழனையா? இதுபற்றி விவாதிக்கின்றனர், சென்னை நுங்கம்பாக்கம், தர்மாபுரம் நவபாரத் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள். சிவக்குமார்: இன்னிக்கு மாணவர்கள் சும்மாவே ஆசிரியர்களை சரியாக மதிப்பதில்லை. இதுல அவங்க தோழனாக மாறிட்டாங்கன்னு வையுங்க. பசங்க சரியாவே படிக்க மாட்டாங்க. அதனால ஆசிரியர் எப்போதுமே கடுமையான ஆசானாக இருக்கவேண்டும்.ஆஷிகா: அப்படியெல்லாம் கடுமையாக இருக்கவேண்டியதில்லை. ஏன் அன்பாக, ஃபிரெண்ட்லியாக சொன்னா, நீ ஏற்றுக்கொள்ள மாட்டியா? இன்னிக்கு பசங்ககிட்ட கடுமையாக நடந்துக்க வேண்டிய அவசியமே இல்லை. நட்பாகவும், அன்பாகவும் பாடம் நடத்தும் ஆசிரியர்தான் தேவை.பரத்: இன்னிக்கு ஒவ்வொரு எக்ஸாமுக்கு முன்னாடியும் இவ்வளவு பாடங்களை முடிக்கவேணும்னு ஆசிரியர்களுக்கு டார்கெட் இருக்கும். அவங்க நடத்துற வேகத்துக்கு நாமளும் படிச்சுக்கிட்டே போனாதான், எக்ஸாமை ஈஸியாக எழுத முடியும். அதுக்கு டீச்சர்ஸ், கடுமையாத்தான் இருந்தாகணும். அவங்க, கொஞ்சம் ஃபிரெண்ட்லியா இருந்துட்டா, நாமளும் பாடத்தை கண்டுக்காம போயிட வாய்ப்பு அதிகம். அதனால பாதிக்கப்படப்போறது என்னவோ மாணவர்களாகிய நாமதான். ராஜேஸ்வரி: அவங்களோட சிரமம் எல்லாம் புரியுது. ஆனா அவங்க எல்லோரையும் பொதுமைப்படுத்தி பேசுறதுதான் புடிக்க மாட்டேங்குது. இப்ப, ஒரு கிளாஸுல ஒரு மிஸ் பாடம் எடுத்தாங்கன்னா, கடைசில, என்னப்பா, புரியுதான்னு கேட்பாங்க. அந்த சமயத்துல யாராவது வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாலோ, பேசிக்கிட்டு இருந்தாலோ, அவங்களை மட்டும் கூப்பிட்டு கண்டிக்கிறதில்லை. எல்லோரையும் பொதுப்படையா திட்டிவிட்டுறாங்க. அப்ப அந்த மிஸ் மேல வருத்தம் ஏற்படுது. அதனால அவங்க எடுக்கிற பாடமே புடிக்காம போயிடுது. இதுக்குப்பதில், அவங்க அன்பாக பேசலாம்தானே? ஆஷிகா: இது ஏதோ சொந்தக்கதை மாதிரி இருக்கே?ராஜேஸ்வரி: அட பொதுவாகச் சொன்னேப்பா...கணேஷ்: இப்ப டீச்சர் கடுமையாக இல்லாவிட்டால், பசங்க யாருமே ஹோம்ஒர்க் செய்ய மாட்டாங்க. நம்ம ஆசிரியர்தானேன்னு அலட்சியம் வந்திடும். ஆசிரியர்னாலே கடுமையாத்தான் இருக்கணும்.ஆஷிகா: அதனாலதான் மாணவர்கள், டீச்சர்ஸ்னாலே எதிரி மாதிரி நினைக்குறாங்க. ஒரு மாணவன் சரியா படிக்கலைன்னா, ஆசிரியர்தான் தோழமையோட அவனுடைய பிரச்னை என்னன்னு பேசிக் கண்டுபிடிக்கணும். ஒருவேளை அவனுக்கு பாடமே புரியாமல் இருக்கலாம். கற்றல் குறைபாடு மாதிரி பிரச்னைகள் இருக்கலாம். வீட்டுல எதுனா சூழ்நிலை சரியில்லாமக்கூட இருக்கலாம். இதையெல்லாம் கவனிக்காம, அடிக்குறதுனாலயோ, கடுமையாக இருக்கிறதுனாலயோ படிப்பு வந்துடாது. பாடம் படிக்கலை, ஹோம் ஒர்க் செய்யலைன்னு அவனை தண்டிக்கிறதுனால ஒரு பயனும் இல்லை. டீச்சர்ஸ்தான் படிக்கிற பிள்ளையோட பிரச்னையை புரிஞ்சுக்க முடியும். அதுக்கு அவங்க ஃபிரெண்ட்லியாத்தான் இருக்கணும்.சிவக்குமார்: டீச்சர்ஸ் ஃபிரெண்ட்லியா இருந்தா, பசங்க எல்லாம் ரொம்ப கேலி செஞ்சு விளையாடுவாங்க.அபிதா: ஏன் கடுமையாக இருக்குற ஆசிரியர்களுக்கு பட்டப்பெயர் வச்சு கூப்பிடுறதில்லையா? பயப்படாமல் அவங்களையும்தான் பசங்க கிண்டல் செய்றாங்க. கடுமையான ஆசிரியர்களை நீங்க எதுனா சொன்னா, அவங்க என்ன செய்வாங்க? நேரா பிரின்ஸிபால் ரூமுக்கு கூட்டிக்கிட்டு போயிடுவாங்க. அதே சமயம் அன்பான ஆசிரியர்னா, நம்ம கூடவே சிரிச்சுட்டு, இப்படியெல்லாம் சொல்லக்கூடாதுன்னு அன்பா சொல்லுவாங்க. பாசமா அவங்க பேசும்போது, இவங்களுக்கும் தங்களோட தப்பு புரியும். பரத்: ஆசிரியர்கள் கடுமையாக நடந்துகொண்டால் தான், கிளாஸில் எல்லோரும் நல்ல மார்க் எடுப்பாங்க. இப்ப டை கட்டிகிட்டு வரலைன்னு வெச்சுக்கங்க, டை கட்டிகிட்டு வாங்கன்னு அன்பா சொன்னா, யார் கேட்பா? கொஞ்சம் கோவமா சொன்னால்தான் மாணவங்க கேட்பாங்க.ராஜேஸ்வரி: ஆசிரியர்கள் எல்லா நேரத்திலேயும் கடுமையாக இருக்கணும்னு அவசியம் இல்ல. மாணவர்களோட டை, ஷூ, யூனிபார்ம் மாதிரியான சீருடை விஷயங்களில், கொஞ்சம் கடுமையா இருக்கலாம். ஆனா, பாடம் நடத்துறதுல ஃபிரெண்ட்லியாத்தான் இருக்கணும். அப்பத்தான், அவங்க நடத்துற பாடத்தில் ஏதாவது சந்தேகம்னா கேட்பாங்க. கடுமையாக இருக்கிற ஆசிரியர்கிட்ட, யாரு சந்தேகம் கேட்பா? பாடங்களை மனப்பாடம் செஞ்சுட்டு அப்படியே எழுதிட்டு வந்திடுவாங்க. அதனால என்ன பிரயோஜனம்? அதே மாதிரி, மாணவர்கள், தங்களோட பல பிரச்னைகளை வீட்டில் சொல்ல முடியாது. ஆனா, ஆசிரியர்களிடம் பேசமுடியும். அதற்காகவாவது அவங்க ஃபிரெண்ட்லியானவங்களாகத்தான் இருக்கணும்.அபிதா: எங்கப்பா, அம்மாவையெல்லாம் கேட்டீங்கன்னா, அவங்களோடு ஸ்கூல் டீச்சர்ஸை அப்படி கொண்டாடுவாங்க. காரணம் என்ன தெரியுமா? அவங்களெல்லாம் அவ்வளவு ப்ரியமானவங்களா, நெருக்கமானவங்களா இருந்ததுதான். மாணவர்கள் எதிர்காலத்துல கொண்டாடறது ஃபிரெண்ட்லியான டீச்சர்களைத்தான்.சிவக்குமார்: அதுவும் சரிதான். ஆசிரியர் எப்பவுமே ஃபிரெண்ட்லியா இருக்கிறது நல்லதில்ல. அப்பப்ப கடுமையாகவும் இருக்கணும். அதேசமயம், ஆசிரியரைப் பார்த்தாலே மாணவர்கள் அச்சப்படும் அளவுக்கு இருக்கக்கூடாதுங்கிறது என்பதையும் ஒப்புக்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !