நான் யார்?
தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் உள்ள பரால் (Parral) என்ற நகரில் 1904ல் பிறந்தேன். 'ரிக்கார்டோ எலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்டோ' என்பது என் இயற்பெயர். பிறந்த சில நாட்களிலேயே தாயை இழந்தேன். எனது தந்தையார் ரயில்வேயில் கூலித் தொழிலாளியாகப் பணி புரிந்தார். எட்டு வயதில் கவிதை எழுதத் தொடங்கினேன். அந்தக் கவிதை இறந்துபோன என் தாயைப் பற்றியது. சிறு வயதிலேயே பிரபல கவிஞனாக ஆனேன். என் தந்தை என் எழுத்து ஆர்வத்தை எதிர்த்தார். நான் புனைபெயரில் கவிதைகள் எழுதினேன். அந்தப் புனைபெயர்தான் உங்களுக்குத் தெரியும். என் 19 வயதில் முதல் கவிதைத் தொகுப்பான 'புக் ஆஃப் ட்விலைட்ஸ் (Book of Twilights)' வெளிவந்தது. என் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அரசியலிலும் எனக்கு மிகுந்த ஆர்வம். சிலி, பர்மா, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தூதராக நான் இருந்திருக்கிறேன். சிலி நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டபோது என்னைக் கைது செய்ய முயன்றார்கள். நண்பர்கள் உதவியுடன் சில மாதங்கள் தலைமறைவாக இருந்தேன். பாரிஸ் தூதராகப் பணியில் இருந்த 1971ஆம் ஆண்டில் எனக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 'இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் கவிஞர்' என்று என்னை மக்கள் புகழ்கிறார்கள். இன்னும் நான் யாரென்று தெரியவில்லையா? பக்கம் 14ல் சந்திப்போம்! வாருங்கள்!பாப்லோ நெருடாபிறப்பு: ஜூலை 12, 1904மறைவு: செப்டம்பர் 23, 1973