உள்ளூர் செய்திகள்

சொன்னது யார்?

நமது பண்பாட்டிற்கும் மரபுக்கும் முரணானது மெக்காலே கல்வி முறை. குழந்தைகளை உடல் உழைப்பில் இருந்து இந்தக் கல்வி முறை, பிரித்து விடுகிறது. சமூதாய உணர்வு இன்றி சுயநலமிக்கவர்களாக மாணவர்களை மாற்றுகிறது.இந்தக் கல்வித் திட்டத்தின் பெரும்பகுதி வாழ்க்கைக்குப் பயன்படாததாக உள்ளது. பொது மக்களின் முன்னேற்றம் பற்றி இன்றைய கல்வி முறை கருத்தில் கொள்ளவில்லை. அவரவர் தேவையை உணர்ந்து கற்பிக்காமல், இயந்திரத் தனமாக ஒரே மாதிரியாக அனைவருக்கும் கற்பிக்கப்படுகிறது. தாய் மொழி புறக்கணிக்கப்படுகிறது.தேர்வுகள் மாணவர்கள் மத்தியில் பயத்தை உண்டாக்குகின்றன.ஆங்கிலேயர் கொண்டு வந்த மெக்காலே கல்வி முறையைப் பற்றி, கடுமையாக விமர்சனம் செய்த அந்தத் தலைவர் யார்?விடை: காந்தி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !