யார்? என்ன ? எது?
1. சிவப்பு என்றால் போவோம்; பச்சை என்றால் நிற்போம். எங்கே?2. தலை உண்டு வாலும் உண்டு ஒன்றை ஒன்று பார்க்காது. அது என்ன ?3. உடலுக்கெல்லாம் உதவுவேன். உழைக்க உழைக்கச் சுருங்குவேன். நான் யார்?4. பறப்பேன் எனக்குச் சிறகில்லை. அழுவேன் எனக்குக் கண்ணில்லை நான் யார்?5. நான் ஒரு கடவுள். நான் ஒரு கிரகம். வெப்பத்தை அளப்பேன். நான் யார்?விடைகள்: 1 தர்பூசணி2 நாணயம்3 குளியல் சோப்பு4 மேகம்5 மெர்க்குரி