உள்ளூர் செய்திகள்

தமிழே அமுதே எழுதியது யார்?

தமிழ் இலக்கிய நூல்களில் உள்ள சில பாடல்களின் வரிகள் மிகவும் புகழ்பெற்றவை. அவற்றிலிருந்து சில வரிகளும், எழுதிய புலவர்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், யார் எதை எழுதியது என்பதை நீங்கள்தான் சரியாக எடுத்து எழுத வேண்டும்.* செம்புலப் பெயனீரார்* நக்கீரனார்* ஒளவையார் * பரணர்* கணியன் பூங்குன்றனார்* நரிவெரூஉத் தலையார்* குடபுலவியனார்1. எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லைவழிய நலனே ..........(எவ்விடத்தில் ஆடவர் நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்நிலம் நன்றாக இருக்கும்)2. உண்பது நாழி, உடுப்பவை இரண்டே..........(கால்படி உணவும் இடுப்பிலும், மேலேயும் அணிந்துகொள்ள இரண்டு ஆடைகளும் ஒருவருக்குப் போதும்)3. தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன..........(நன்மையும் தீமையும் நம் செயல்களால் வருபவை, பிறரால் அல்ல)4. நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லது செய்தல் ஓம்புமின்..........(நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை. கெடுதல் செய்ய வேண்டாம்)5. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.............(பசிக்கு உணவு கொடுத்தவர் உயிர் கொடுத்தவர்.ஆவர்)6. எத்துணை ஆயினும் ஈதல் நன்று ..........(சிறியதோ பெரியதோ, எதுவாயினும் பிறருக்குக் கொடுப்பது நன்று)7. யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்........(என் தாயும் உன் தாயும் யார்? என் தந்தையும் உன் தந்தையும் எந்த விதத்தில் உறவினர்கள்)விடைகள்1. ஒளவையார்2. நக்கீரனார்3. கணியன் பூங்குன்றனார் 4. நரிவெருஉத் தலையார்5. குடபுலவியனார்6. பரணர்7. செம்புலப் பெயனீரார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !