விமானங்களில் வை-ஃபை
புதுடெல்லி: நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் வை-ஃபை இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இந்திய சிவில் விமான போக்குவரத்து துறையின் செயலர் திரு. சௌபே, இந்திய வான் எல்லைக்குள் பறக்கும் விமானங்களில் விரைவில் வை-ஃபை வசதி அனுமதிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். இந்த அனுமதி, அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கும் பொருந்தும்.