நீ திரண்டு பெய் மழையே!
மழையில்லாமல் தண்ணீருக்குப் பஞ்சம் வந்து விட்டது. நகரங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவிக்கின்றன. வழக்கமாகக் காலத்தே பெய்கின்ற மழை பெய்யாமல் ஏமாற்றிவிட்டால் அவ்வாண்டு தண்ணீருக்குப் பெரும் பாடுபடுகிறோம்.முற்காலத்தில் வேளாண்மைக்குப் போதாதிருந்த நீர்ப்பற்றாக்குறை இப்போது அன்றாட வாழ்க்கைக்கும் வந்துவிட்டது.மழையைக் குறித்துக் கூறுகையில் ஒரு பழமொழி சொல்வார்கள். “ஒன்று பெய்து கெடுக்கும். இல்லையேல் பெய்யாது கெடுக்கும்” என்பார்கள். இக்காலத்தில் மழை பெய்தால் வெள்ளம் சூழ்கிறது. இல்லையேல் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.மழையின் இந்தப் போக்கு இன்றைக்குத்தான் என்றில்லை. முற்காலத்திலும் இதுதான் நிலைமை. இன்றிருப்பதுபோல் மழைக்கு ஏங்கிய மனநிலையில் வேதநாயகம் பிள்ளை என்ற புலவர் பாடுகிறார்.காரேஉன் நீரையெல்லாம் கள்ளன் கவர்ந்தானோநீரே உதவாய் நெறியாமோ - நேரேதான்வாரியுண்டு வாரிமொண்டு வாரிஉண்டு வானிருண்டுபேரிகொண்டு நீதிரண்டு பெய்.மேகமே! உன்னைத் திருடன் கொண்டுபோய்விட்டானா? நீகூட உதவாமல் இருப்பது நல்ல நெறிதானா? உனக்கு நேராக அங்கே கடலுண்டு (வாரி உண்டு).அங்கே போய் கடலை முகந்து (வாரி மொண்டு) அதனை அள்ளிக்குடித்து (வாரி உண்டு) வானத்தை இருட்டாக்கி பேரிகைபோல் இடியாய் முழங்கி நீ திரண்டு பெய்வாயாக.மேகத்தைப் பார்த்து எப்படிக் கெஞ்சிக் கேட்கிறார், பாருங்கள். இன்னொரு பாட்டும் உண்டு.செய்வேன் எனச்சொல்லிச் செய்யா உலோபரைப்போல்பெய்வேன் எனக்காட்டிப் பேர்முகிலே - மைவானில்ஓடுவாய் நிற்பாய் உருமுவாய் மின்னுவாய்நீடுவாய் பின்பெய்யாய் நீ.பேர்முகிலே = பெரிய மேகமே! ஒன்றைச் செய்வேன் என்று சொல்லிவிட்டுச் செய்யாதிருக்கின்ற கஞ்சர்களைப்போல் (உலோபர் = கஞ்சர்) கறுத்த வானில் (மைவான்) ஓடுவாய், நிற்பாய், இடியால் உருமுவாய், மின்னலாய் மின்னுவாய், நீண்டநேரம் இருப்பாய் (நீடுவாய்)! ஆனால், அதற்குப் பிறகு பெய்யவே மாட்டாய் நீ.மேகங்களைப் பார்த்து இப்படி வருந்திப் பாடியிருக்கிறார். - தமிழ்மலைநினைவிற்கு1. 'க்' கின் இன எழுத்து எது?.........................2. 'ம்' இன் இன எழுத்தாக எது வரும்?.........................3. மூவறிவு உயிர்கள் மூன்றைக் கூறு?.........................