உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / பாண்டி பஜாரை அதிரவைத்த பேஷன் ஷோ

பாண்டி பஜாரை அதிரவைத்த பேஷன் ஷோ

சென்னையின் இதயமான பாண்டி பஜார் நுாற்றுக்கணக்கான ஜவுளி மற்றும் நகைக்கடைகள் சங்கமித்து இருக்கும் பகுதியாகும்.இங்கு சென்னைவாசிகள் மட்டுமின்றி வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் கூட மக்கள் வருவர்.ஆன்லைன் வர்த்தகம் ஒரு பக்கம் அமோகமாக நடந்தாலும், நேரில் பார்த்து ரசித்து பேரம் பேசி வாங்கும் சுகமே தனி என்பதை நிரூபிக்கும் வகையில் பாண்டி பஜாரில் எப்போதும் எல்லா கடைகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதும்.நேற்று முன் தினம் முன்னனி பிராண்ட் நிறுவனமான தனிஷ்க் தனது பிரம்மாண்டமான ஷோரூமை இந்த பாண்டி பஜாரில் திறந்துள்ளது.இந்த வணிக வளாகத் திறப்பு விழாவினை முன்னிட்டு கடையின் வாசலில் உள்ள திறந்த வெளிப்பகுதியில் பேஷன் ஷோவை நடத்தினர்.தமிழகம்,கேரளா,கர்நாடகா உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு மாநிலப் பெண்களின் உடை மற்றும் நகை அணியும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த பேஷன் ேஷா நடைபெற்றது.வழக்கமாக பெரிய ஒட்டல்களின் உள் அரங்கத்தில் நடைபெறும் இது போன்ற பேஷன் ஷோ பாண்டி பஜார் போன்ற திறந்த வெளியில் நடந்ததால் மக்கள் திரண்டு வந்து பார்த்தனர்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !