UPDATED : ஆக 25, 2024 09:22 AM | ADDED : ஆக 24, 2024 09:20 PM
இந்தியன் பார்முலா 4 கார் ரேஸ் காரணமாக சென்னை அருகே உள்ள இருங்காட்டுக் கோட்டை கார் மைதானம் கார்களின் வேகம் காரணமாக அதிர்ந்தது.
வருடத்திற்கு சில முறை இங்கே கார் மற்றும் பைக் ரேஸ் நடப்பது வாடிக்கையான விஷயம்தான் ஆனால் கடந்த ஒரு மாதமாக சென்னையின் நகர்ப்பகுதியில் தமிழக அரசே நடத்தப்போகும் பார்முலா கார் ரேஸ் காரணமாக இருங்காட்டுக் கோட்டையில் நடக்கும் கார் ரேஸ் தனி கவனிப்பு பெற்றது.
டிரையல் ரேஸ், பிராக்டிகல் ரேஸ் எல்லாம் விட்ட பிறகு முறைப்படி மதியம் ரேஸ் துவங்கியதுமே மைதானம் அதிர்ந்தது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
குறைந்த பட்சம் 200 கி.மீட்டர் வேகம் என்பதால் கார்கள் விர், விர்ரென்று பறந்தது. இருபது முறை பந்தய மைதானத்தை வலம் வந்த பிறகு ஜெயித்த வீரர் 17 வயது இந்திய வீரர் ஜேடனாவார்.போட்டிகள் இன்றும் நடக்கிறது.-எல்.முருகராஜ்.