உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / சிலிர்க்வைக்கும் படங்களுடன் சென்னை புகைப்படக் கண்காட்சி

சிலிர்க்வைக்கும் படங்களுடன் சென்னை புகைப்படக் கண்காட்சி

சென்னையில் செயல்பட்டு பழமையான போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 90 உறுப்பினர்கள் எடுத்த 253 ற்கும் மேற்பட்ட படங்கள் லேண்ட்ஸ்கேப்,வைல்டுலைப்,மோனோகிராம்,போர்ட்ரய்ட் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தியுள்ளனர். கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில் நடந்துவரும் இந்த புகைப்படக்கண்காட்சியினை நேற்று திரைப்பட ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன் திறந்துவைத்தார்,தலைவர் ராமசாமி செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் விருந்தினருக்கு கண்காட்சியினை சுற்றிக்காண்பித்தனர். கண்காட்சி வருகின்ற 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது,அனுமதி இலவசம்.பார்வையாளர் நேரம் பகல் 11 மணி முதல் இரவு 7 மணிவரை. -எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ