உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / செழியனின் உலக சினிமா..

செழியனின் உலக சினிமா..

செழியன் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத அருமையான திரைப்பட ஒளிப்பதிவாளர்,இயக்குனர்.அவருக்குள் ஒரு எழுத்தாளரும் ஒளிந்து கொண்டுள்ளார் அதை அவரே அடையாளம் கண்டு அவ்வப்போது சிறுகதை,கட்டுரை வாயிலாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்திவந்தார்.செழியனுக்கு சினிமாதான் எல்லாமே.சினிமாவில் காலடி எடுத்துவைத்த காலத்தில் அதைப் புரிந்து கொள்வதற்காக தேடி தேடி உலக சினிமாக்களை பார்த்துள்ளார்.அதை அவர் புரிந்து கொண்ட விதத்தை ஆனந்த விகடனில் தொடர்கட்டுரையாக 'உலக சினிமா' என்ற தலைப்பில் 93 வாரங்களாக எழுதிவந்தார்.அவரது எழுத்து நடையும் அதில் உள்ள எதார்த்தமும் எல்லோருக்கும் பிடித்துப் போனது, தொடர் முடிந்ததும் புத்தகமாகவும் வெளிவந்தது.எடையிலும் விலையிலும் கனமான அந்த புத்தகத்தை மலிவு விலையில் மக்கள் பதிப்பாக சீர் வாசகர் வட்டத்தினர் கொண்டு வந்துள்ளனர்,ஆம் 760 பக்கம் கொண்டு மிகத்தரமாக தயாரிக்கப்பட்டுள்ள அந்தப் புத்தகம் வெறும் 200 ரூபாய்க்கு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.மக்கள் பதிப்பாக வந்துள்ள உலக சினிமா புத்தக வெளியீட்டு விழா கடந்த 15/12/2024 ஆம் தேதி சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது.விழாவில் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம்,ஓவியர் டிராட்ஸ்கி மருது,படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத்,இயக்குனர் பாலாஜி சக்திவேல்,எழுத்தாளர் கண்ணன் உள்ளீட்டோர் கலந்து கொண்டனர்.வாசகர்கள் வருகையால் அரங்கம் மட்டுமின்றி டிஸ்கவரி புக்பேலஸ் பார்கிங் பகுதி கூட நிரம்பிவழிந்தது,வந்தவர்கள் அனைவரையும் டிஸ்கவரி வேடியப்பன் வரவேற்றார்.எழுத்தைப் போலவே செழியனின் ஏற்புரையும் எளிமையாக,இனிமையாக இருந்தது.இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த சீர் வாசகர் வட்டம் கவிஞர் தம்பியை பாராட்டியே ஆக வேண்டும்.இத்தணை சிறப்பு விருந்தினர்களை அழைத்திருந்தாலும் எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் குறித்த நேரத்தில் விழாவினை ஆரம்பித்து குறித்த நேரத்தில் முடித்தார்.அவர் பேசுகையில் சொன்ன குறிப்புகள் பல சுவராசியமானவை.இந்த புத்தகத்தை மக்கள் பதிப்பாக மலிவு விலையில் கொடுக்கவேண்டும் என்பதற்காக முயற்சிகள் எடுத்த போது பலரும் கைகொடுத்ததால்தான் இந்த விலைக்கு கொடுக்கமுடிகிறது என்றார்.இளம் வாசகர்களை புத்தக வாசிப்பிர்க்கு உள்ளாக்கவேண்டும் என்பதற்காக இரண்டு பள்ளி மாணவர்களை மேடையேற்றி அவர்கள் புத்தகம் பெற ஏற்பாடு செய்திருந்தார்.சில சினிமாக்களில் வரும் சில காட்சிகளைப் பார்க்கும் போது கொடுத்த காசுக்கு இந்த ஒரு சீன் போதும் என்று பாராட்டி சொல்வது உண்டு, அது போல இந்த புத்தகத்தை புரட்டும் போது முன்னுரையாக செழியன் எழுதியுள்ள 18 பக்கங்களே கொடுத்த காசுக்கு செல்லுபடியாகும் எனச் சொல்லத் தோன்றியது...-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அய்யப்பன் எழுத்தர் vpm
டிச 16, 2024 16:19

சீர் வாசகர் வட்டம் மற்றும் கவிஞர் தம்பி அவர்கள் வாழ்த்துக்கள் சீர் இலக்கிய வட்டம் எத்தனையோப் பலச் சிறப்பு வாய்ந்த எழுத்தாளர்களின் அரிய படைப்புகளைப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது எளிய மக்கள், எளிய வாசகர்கள், பெரும் விலைக்கொடுத்து வாங்க முடியாத சூழலில் தவித்து போது மக்கள் பதிப்பாக முன் வெளியீட்டு விலையில் வழங்கி வருகிறது சீர் வெளியீடு புதுமைப்பித்தன் சிறுகதைகள், கந்தர்வன் கதைகள், போரும் வாழ்வோம், போன்ற எண்ணற்ற படைப்புகளை வழங்கி வந்த நிலையில் இயக்குநர் செழியன் அவர்கள் ஆனந்த விகடன் இதழில் தொடர்ந்து எழுதி வந்த உலக திரைப்படங்கள் குறித்து கட்டுரையைச் சீர் வாசகர் மட்டுமல்ல அனைத்து வகை வாசகர்களுக்கும் எளிய வகையில் சென்று சேர வேண்டும் என்ற நல் நோக்கத்தோடு வெளியிட்டு வரும் சீர் வாசகர் வட்டத்திற்கு வாழ்த்துக்கள் 15/12/2024 மாலை 4 00 மணியளவில் டிஸ்கவரி புக் பேலஸ் கேகே நகர் முகவரியில் இயக்குநர் பிசி ஸ்ரீராம் ஓவிய மருது ஆனந்த விகடன் கண்ணன் மற்றும் மாபெரும் ஆளுமைகள் இயக்குநர் செழியன் அவர்களின் புத்தகத்தை வெளியிட்டார்கள்,மகிழ்ச்சி உலக சினிமா புத்தகத்தைப் பெறுவதற்கு விழுப்புரத்திலிருந்து ஏகலைவன் இதழ்களின் ஆசிரியர் ஏம்பல் ராஜா, முத்துவேல் இராமமூர்த்தி அவர்களும் கீதாஞ்சலி அவர்களும் விழுப்புரம் இதய தரிசன இலக்கிய வட்டத்தின் சார்பாக அய்யப்பன் எழுத்தர் ஆகிய நானும் உடன் ஆவணப்பட இயக்குநர் தவமுதல்வன் அவர்களும் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது விழாவைச் சிறப்புறச் செய்த சீர் வாசகர் வட்டத்திற்கும் டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனத்திற்கும் கலந்து கொண்ட வாசகர்கள் அனைவரின் சார்பாகவும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் அய்யப்பன் எழுத்தர் வழுதரெட்டி விழுப்புரம் 16/12/2024


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை