UPDATED : ஏப் 17, 2025 12:41 PM | ADDED : ஏப் 17, 2025 12:39 PM
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில் ஒளி மற்றும் மரபு என்ற தலைப்பில் நீர் வண்ண ஒவிய (வாட்டர் கலர் பெயிண்டிங்) கண்காட்சி நடந்துவருகிறது.சென்னையில் கலை தொடர்பான விஷயங்களை கொண்டாடி மகிழ்வதிலும் கலைஞர்களை உற்சாகப்படுத்துவதிலும் அஷ்விதாஸ் முன்னிலை வகிக்கிறது.தற்போது முன்னனி மற்றும் வளர்ந்துவரும் கலைஞர்களின் கைவண்ணத்தால் உருவான நீர் வண்ண ஒவிய கண்காட்சியினை நடத்திவருகிறது.வருகின்ற 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், டி.பி. ராய் சௌத்ரி, கே.சி.எஸ். பணிகர், எஸ். தனபால் மற்றும் ஜி.டி. பால்ராஜ் போன்ற புகழ்பெற்ற கலைஞர்களின் படைப்புகளையும், அபனீந்திரநாத் தாகூர், ககனேந்திரநாத் தாகூர் மற்றும் நந்தலால் போஸ் போன்ற ஆரம்பகால வங்காள பள்ளி கலைஞர்களின் படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.கண்காட்சியில் இடம் பெற்றுள்ள படங்கள் பெரும்பாலும் கிராம வாழ்க்கையை மையமாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது , இந்த ஓவியங்கள் அதன் எளிமை காரணமாக பார்வையாளர்களை ரசிக்கவைக்கிறது.---எல்.முருகராஜ்--