உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / திருவிழா களைகட்டியுள்ள சாந்தோம் பேராலயம்.

திருவிழா களைகட்டியுள்ள சாந்தோம் பேராலயம்.

வருடாந்திர விழாவினை முன்னிட்டு சென்னை சாந்தோம் பேராலயம் வண்ண விளக்குகளால் களைகட்டி உள்ளது.இந்தப் பேராலயம் கோத்தீக கட்டிட கலையைச் சேர்ந்தது.கோயிலின் நீளம் 112 அடிகள், அகலம் 33 அடிகள்.பேராலய கோபுரத்தின் உச்சி அளவு தரை மட்டத்திலிருந்து 155 அடிகள்.பேராலயத்தின் நடுப்புறத்தில் இருந்து மேல் தளம் வரை 36.5 அடிகள் உயரம்.மூன்று கோபுரங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு கோபுரங்களில் ஆலய மணி பொருத்தப்பட்டுள்ளது,பேராலயத்தின் அழகும், வரலாற்றுச் சிறப்பும் ஆயிரக்கணக்கான மக்களை கவர்ந்து இழுக்கின்ற நிலையில் இங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமரிசையாக கொண்டாடப்படும் இந்த விழாக்கள் தவிர இப்போது புனித தோமையாரை நினைவு கூறும் வகையில் ஐந்து நாள் திருவிழா நடத்தப்படுகிறது.முதல் நாளான கடந்த புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.பேராலய அதிபர் வின்சென்ட் சின்னதுரை கொடியேற்றினார்,அருள்தந்தையர்,அருள் சகோதரிகள்,துறவறத்தார்,பங்கு பேரவையினர் மற்றும் இறைமக்கள் என திரளானவர்கள் கொடியேற்ற நிகழ்வில் பங்கு பெற்றனர்.வருகின்ற 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மலை 5:45 மணியளவில் தேர்த்திருவிழா நடைபெறும்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ