உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / குறளுக்கு ஒரு கண்ணப்பன்

குறளுக்கு ஒரு கண்ணப்பன்

தமிழ் மொழிக்கு வளமை சேர்க்கும் நுால், தமிழருக்கு வாழ்வியல் உண்மைகளை உணர்த்தும் நுால், தன் தோற்றத்தால் தமிழகத்திற்கு உலகப் பெரும் புகழைப் பெற்றுத்தந்த நுால் திருவள்ளுவரின் திருக்குறள். இந்த திருக்குறளை மனதில் பதிய வைத்து எந்த வரிசை எண்ணைக் கூறினாலும் அந்தக் குறளையும், அந்த அதிகாரத்தையும் கூறுவதோடு தலைகீழாகவும் சொல்லக்கூடிய நினைவாற்றல் உள்ளவராகவும், திறக்குறளை இன்றைய இளைய தலைமுறையினருக்கும் பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கோடு செய்து வருகிறார் சிவகங்கை ஓய்வு பெற்ற தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன். அவர் நம்மிடம் மனம் திறக்கையில்... நான் 1952ல் நடராஜபுரத்தில் பிறந்தேன். சோழபுரம் கவியோகி சுத்தானந்தபாரதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி 2010ல் ஓய்வு பெற்றேன். தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது, தேசிய நல்லாசிரியர் விருதுகளை பெற்றுள்ளேன். நான் வேதியியல் டிகிரி படித்திருந்தாலும் தமிழில் அதிக நாட்டம் இருந்தது. ஓய்வு பெற்றவுடன் தமிழில் இலக்கியங்கள், காப்பியங்களை படிக்க தொடங்கினேன். திருக்குறள் படிப்பதில் அதிக கவனம் செலுத்தினேன். 1330 குறட்பாக்களையும் தெளிவாக, ஆழ்ந்து படித்தேன். என்னிடம் ஒரு குறளின் எண்ணை யார் கூறினாலும் அதன் அதிகாரத்தின் தலைப்பையும் குறளையும் அதன் பொருளையும் கூறமுடியும். எண் சொன்னால் குறளையும், குறள் சொன்னால் அதன் வரிசை எண்ணையும், அதிகாரத்தை கூறினால் குறள்களை தலைகீழாக கீழ் இருந்து மேல்வரையும் என்னால் சொல்ல முடியும். குறளின் கடைசி வார்தையை சொன்னால் அதற்கான குறளைச் சொல்லவும் முடியும். நான் படித்த இந்த திருக்குறளை மாணவர்களிடம் பரப்பும் நோக்கில் பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறேன். இது எனது நினைவாற்றலை கூர்மைபடுத்தியது. திருக்குறளை கற்க விரும்பும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கிறேன். இவரை தொடர்புகொள்ள 98424 09522


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ