உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் சொத்து பத்து கதர் சட்டை!

முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் சொத்து பத்து கதர் சட்டை!

19 வருடம் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றிய இவர் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதியுடன் பணியாற்றி உள்ளார். இவருடைய தந்தை கிருஷ்ணசாமிபாரதி, தாயார், தாய்மாமன், பெரியப்பா,பெரியம்மா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே சுதந்திரத்திற்காக போராடி சிறை சென்றவர்கள். இவரும் இவரது சகோதரியும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்கள்.லட்சுமிகாந்தன் பாரதி கூறியது: மதுரை துரை பொன்னுச்சாமி ஐய்யங்கார் பள்ளியில் தொடக்க கல்வி பயின்றேன். பட்டப்படிப்பு அமெரிக்கன் கல்லுாரி, பட்ட மேற்படிப்பை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில் முடித்து 1967ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பொறுப்பேற்றேன். அண்ணாதுரை முதல்வராக இருந்த போது மக்கள் குறைகளை தீர்க்கும் மனுநீதி திட்டம் கொண்டு வர ஆலோசனை கூறி அதனை செயல்வடிவம் ஆக்கினேன். கருணாநிதி முதல்வராக இருந்த போது தனி அதிகாரியாக இருந்தேன், மதுரையில் கலெக்டராக இருந்த போது வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் தத்தளித்தனர்.ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்கப்பட்டு மதுரை கரிமேடு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு குடியிருப்புகள் உருவாக நான் காரணமாக இருந்ததால் 'லட்சுமிகாந்தன் நகர்,' என பெயர் சூட்டினர்.நேர்மையாகவும், எளிமையாகவும் இருப்பதை முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை பார்த்து கற்றுகொண்டேன்.இவ்வாறு கூறினார்.கலெக்டராக இருந்த போது கிடைத்த வருமானத்தை இலங்கையில் ஓம் பிரணவ ஆசிரமத்திற்கு வழங்கியுள்ளார். சென்னையில் மகன் வீட்டில் வசித்து வரும் இவர், மாதத்தில் பத்து நாட்கள் நயினாகரம் கிராமத்திற்கு சென்று தங்குவது வழக்கம். இவர் ஒரு ஆழ்ந்த தினமலர் வாசகர். கலெக்டராக பணியாற்றிய போதும் சரி, இப்போதும் சரி தினமும் காலையில் எழுந்த உடன் தினமலர் படித்த பின்புதான் மற்ற பணிகளை கவனிக்கிறார்.ஆன்மிகத்தில் நாட்டமுடைய இவர் இன்றளவும் ஆரோக்கியத்துடன் வலம் வருகிறார். தினசரி நடைபயிற்சி, யோகா உள்ளிட்டவற்றை தவறாது கடைபிடிக்கிறார். எங்கு சென்றாலும் தனியாகவே செல்கிறார். உதவிக்கு என்று யாரையும் வைத்து கொள்வதில்லை.தென்காசி மாவட்டம் நயினாகரத்தைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்தன் பாரதி. 99 வயதான முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர் அண்மையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். காந்திய வாழ்க்கையை கடைபிடிக்கும் இவரது சொத்து பத்து கதர் சட்டை, பத்து பேன்ட், இரண்டு துண்டு மட்டுமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

R.Manickavasagam Ramanathan
டிச 27, 2024 22:36

இவர்களை போன்ற எளிமையான நேர்மையான அதிகாரிகளை பற்றி கேள்வி படும்போது மகிழ்ச்சியாக உள்ளது


Srivane
டிச 25, 2024 17:36

வாழ்த்துக்கள் அய்யா. உங்கள் சேவையே நினைத்து பெருமைபடுகிறேன். நானும் இபோதெல்லாம் உங்களை போன்ற வர்களிடம் கற்று என் வாழ்க்கையில் கடைபிட்துகொண்டு இருக்றேன்.


N.Purushothaman
டிச 25, 2024 17:03

வாழ்த்துக்கள் ...நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ...


Matt P
டிச 25, 2024 09:02

நேர்மையாகவும், எளிமையாகவும் இருப்பதை முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை பார்த்து கற்றுகொண்டேன்.. நேர்மையும் எளிமையும் திமுகவை ஆரம்பித்த அண்ணாதுரை அவர்களுக்கு இருந்தது. நல்ல எண்ணத்தோடு ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி கருணாநிதி பொறுப்பேற்ற பிறகு பல அவதூறுகளுக்கு ஆளாகி விட்டது என்பதை இனிமேலாவது மக்கள் தெரிந்து கொண்டால் சரி.


Matt P
டிச 25, 2024 08:41

இவரது சொத்து பத்து கதர் சட்டை, பத்து பேன்ட், இரண்டு துண்டு மட்டுமே.....நம்ம அப்பா கூட வேலை செய்துட்டும் பொழைக்க தெரியாத மனுஷனா இருந்திருக்காரே...ன்னு நம்ம முதலு அமைச்சரு நினைச்சுக்கலாம். குடும்பமே நாட்டுக்காக உழைச்சது... இருக்கும் வரை நல்ல பேரை எடுத்துக்கணும். அது ஒண்ணு தான் நிலைச்சு நிக்கும்


N Annamalai
டிச 25, 2024 06:03

மிக்க மகிழ்ச்சி .வாழ்க வளமுடன் உடல் நலமுடன்


N Annamalai
டிச 25, 2024 06:03

மிக்க மகிழ்ச்சி .வாழ்க வளமுடன் உடல் நலமுடன்


N Annamalai
டிச 25, 2024 06:01

மிக்க மகிழ்ச்சி .வாழ்க பல்லாண்டு உடல் நலமுடன்


N Annamalai
டிச 25, 2024 06:02

மிக்க மகிழ்ச்சி .வாழ்க பல்லாண்டு உடல் நலமுடன்.


PR Makudeswaran
டிச 23, 2024 09:50

தலை வணங்குகிறேன் மிகுந்த பணிவன்புடன்.


சமீபத்திய செய்தி