லெபனானில் 77 வது இந்திய ராணுவ தினம்
பெய்ரூட்: லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் இந்திய தூதரகத்தின் சார்பில் 77வது இந்திய ராணுவ தினம் போர் நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்திய தூதர் நூர் ரஹ்மான் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்த தியாகிகள் குறித்து நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், லெபனான் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். - நமது செய்தியாளர் காஹிலா