மஸ்கட்டில் இந்தியா- ஓமன் இடையேயான வரலாற்று தொடர்பை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி
மஸ்கட் : ஓமன் தலைநகர் மஸ்கட்டில் 'மாண்ட்வியில் இருந்து மஸ்கட்டிற்கு' என்ற தலைப்பில் இந்தியா மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று தொடர்பை ஆவணப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பல நூற்றாண்டு காலமாக இந்தியா- ஓமன் இடையே வர்த்தக மற்றும் கலாசார தொடர்பு இருந்து வருகிறது. இதனை அடுத்து இருநாடுகளுக்கும் இடையிலான கலாசார பரிமாற்றங்கள் குறித்து ஆவணப்படுத்தும் வகையில் 'மாண்ட்வியில் இருந்து மஸ்கட்டிற்கு' என்ற தலைப்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் கால்வின் ஆலென் ஜூனியர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இருநாடுகளுக்கு இடையிலான வரலாற்று தொடர்பை விளக்கம் அளித்தார். இந்திய அரசின் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியருக்கான 'பாரதிய சம்மன்' விருதைப் பெற்ற டாக்டர் பி. முகம்மது அலி ஓமன் நாட்டில் தனது பணி அனுபவத்தை விவரித்தார். ஓமன் இந்திய பிரமுகர் ஹர்செண்டு ஷா ஓமனில் இந்திய பள்ளிக்கூடத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஓமன் அரசு அதிகாரிகள், இந்திய சமூகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.- நமது செய்தியாளர் காஹிலா