உள்ளூர் செய்திகள்

துபாயில் அலுமினிய கேன்கள் சேகரிப்பு

துபாய்: துபாயில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் நடந்த அலுமினிய கேன்கள் சேகரிப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் அமீரகம் முழுவதும் 272 அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் அலுமினிய கேன்களை வழங்கியது. இந்த கேன்களின் மொத்த எடை 11,945 கிலோ கிராம் ஆகும். 29 வது ஆண்டாக இந்த கேன் சேகரிப்பு நடந்தது. இந்த கேன் சேகரிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 4 இலட்சத்து 52 ஆயிரத்து 708 கிலோ கிராம் சேகரிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் சமூக ஆண்டையொட்டி இந்த முகாம் நடந்ததாக அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவர் ஹபிபா அல் மராசி தெரிவித்தார். இந்த முகாமுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நிறுவனங்கள் உள்ளிட்ட தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.- நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !