உள்ளூர் செய்திகள்

ஓமன் இந்திய பள்ளிக்கூடத்தை பார்வையிட்ட தூதர்

மஸ்கட் : ஓமன் நாட்டின் சஹம் பகுதியில் உள்ள இந்திய பள்ளிக்கூடத்தை தூதர் ஜி.வி.ஸ்ரீனிவாஸ் பார்வையிட்டார். பள்ளிக்கூடத்துக்கு வந்த இந்திய தூதருக்கு சாரண மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அதனை இந்திய தூதர் ஏற்றுக் கொண்டார். பின்னர் பள்ளிக்கூடத்தில் உள்ள பல்வேறு வசதிகளை பார்வையிட்டார். பள்ளிக்கூட முதல்வர் தலைமையிலான நிர்வாகக்குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. --- நமது செய்தியாளர் காஹிலா .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்