உள்ளூர் செய்திகள்

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு TNTJ ரியாத் மண்டலம் நடத்திய இரத்ததான முகாம்

ரியாத்: மனிதநேயப் பணிகளில் மணி மகுடமாக திகழும் பணி உயிர்காக்கும் இரத்ததான சேவையே ஆகும். சவூதி அரேபியா நாட்டில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நடத்திய 144வது மாபெரும் இரத்ததான முகாம் ஜனவரி 24, 2025 அன்று ரியாத் கிங் பைசல் மருத்துவமனையில் சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பாக நடைபெற்ற இம்முகாமில் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட கிளைகளின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 80 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். உடல் தகுதி மற்றும் நேர அடிப்படையில் இம்முகாமில் “66 யூனிட்கள்” இரத்த தானம் வழங்கப்பட்டது. உயிர்காக்கும் உன்னத பனியான இதுபோன்று முகாம்களை மென்மேலும் தொடர்ச்சியாக நடத்த வேண்டுமென மருத்துவமனை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. முகாம்கள் மட்டுமல்லாது அறுவை சிகிச்சை போன்ற அவசர காலங்களில் தொடர்பு கொண்டவுடன் உடனடியாக இரத்த கொடையாளர்களை ஏற்பாடு செய்வது, தேவைக்கேற்ப மொபைல் இரத்ததான முகாம்களையும் ரியாத் மண்டலம் சார்பாக நடத்துவது குறிப்பிடத்தக்கது. இதற்காக களப்பணிகள் செய்த “ரியாத் மண்டலத்தின் அனைத்து கிளைகளின் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் எந்நேரமாயினும் ஓடோடி வந்து தொடர்ச்சியாக இரத்ததானம் செய்யும் இரத்தக் கொடையாளர்களுக்கும்” “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம்” சார்பாக இந்நேரத்தில் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்