ஷார்ஜாவில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா
ஷார்ஜா : ஷார்ஜா புத்தக ஆணையத்தின் சார்பில் ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் கடந்த 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை குழந்தைகள் வாசிப்புத் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, இலங்கை, எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்றன. மாணவ, மாணவியரை கவரும் வகையில் இலக்கிய மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தது. 12 நாட்கள் நடந்த இந்த வாசிப்புத்திருவிழாவை ஒரு இலட்சத்து 57 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா