அமீரகத்தில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் வெளியான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று 99.6 சதவீத மதிப்பெண்கள் பெற்று தோப்புத்துறை மீ.அ.ம.சாகுல் ஹமீது மகன் S.ஹபீத் மீரா முதலிடம் பெற்றார். அவருக்கு தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் - துபாய் சார்பில் வாழ்த்து தெரிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்வுக்கு சங்கத் தலைவர் எம்.எஸ். முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் கெளரவ ஆலோசகர் ஏ.எம்.ஒய்..சஹாபுதீன், காப்பாளர் M.J.அவுலியா முகமது,செயலாளர் M.S.முகமது இஸ்மாயில், துணைச் செயலாளர், A.R.Y.அப்துல் ரெஜாக், செயற்குழு உறுப்பினர், M.யூசுப்ஷா மற்றும் நிர்வாகிகள் M.ஷேக் அலாவுதீன், A.அஹமது அனஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். - நமது செய்தியாளர் காஹிலா