துபாயில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி
துபாயில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி துபாய் : துபாய் நகரில் நீலகிரி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகர்கள் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி கலந்து கொண்டார்.நீலகிரி மாவட்ட பொருளாளர் கூடலூர் அலி அஹமது, கூடலூர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் சால்வை அணிவித்து கெளரவித்தனர். அமீரக காயிதே மில்லத் பேரவை பொருளாளர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, துணை பொதுச் செயலாளர் மக்கி பைசல் ஆகியோர் உடன் இருந்தனர்.----துபாயில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா