அஜ்மானில் இஃப்தார் உணவுப் பொருட்கள் விநியோகம்
அஜ்மான் : அஜ்மான் பகுதியில் ரமலான் மாதத்தையொட்டி போலீஸ் சார்பில் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு இஃப்தார் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். - நமது செய்தியாளர் காஹிலா