குவைத்தில் தீபாவளி கொண்டாட்டம்
குவைத் தமிழ்ச் சங்கத்தின் 19ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. 2024-2025 ஆண்டுக்கான தலைவராக ஆனந்தி நடராஜனும் மற்ற புதிய நிர்வாகிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகர் சாந்தனு பாக்கியராஜ், நடிகை கீர்த்தி சாந்தனு கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பட்டிமன்ற நடுவர் புலவர். மா .இராமலிங்கம் தலைமையில், “சமூக ஊடகங்கள் நன்றா? தீதா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் Dr.R. வேதநாயகி & ராஜ் TV புகழ் நித்யப்ரியா நகைச்சுவை , சிந்தனையோடு பேசி அனைவரையும் மகிழ்வித்தனர். இந்நிகழ்ச்சியில் குவைத் சமூகசேவகர் கீரணி வெங்கடமதி மற்றும் “கூழாங்கல்” “ஜமா” திரைப்பட தயாரிப்பாளர் S.சாய் தேவானந்த் ஆகிய இருவரையும் குவைத் தமிழ்ச் சங்கம் கௌரவித்து, பாராட்டியது. Dr.ஹைதர் அலி, A.N.நடராஜன் & முன்னாள் நிர்வாகிகள் G.ராஜா, S.செல்லத்துரை, ராமதாஸ், Dr.சாமி P.வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சரவணபவன் இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. - தினமலர் வாசகர்கள் எஸ்.செல்லதுரை, ஃபஹீல்