உள்ளூர் செய்திகள்

துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் பக்ரீத் பெருநாள் உற்சாக கொண்டாட்டம்

துபாய் : துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பெருநாள் உற்சாக கொண்டாடப்பட்டது. துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்கள், திடல்களில் சிறப்பு தொழுகை ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது. இந்த தொழுகைகளில் அந்தந்த பகுதி ஆட்சியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ் குத்பாவுடன் கூடிய சிறப்பு தொழுகை துபாய் அல் கிசஸ் பகுதியில் உள்ள கிரஸெண்ட் ஆங்கில பள்ளிக்கூடத்தில் நடந்தது. இதில் தமிழர்கள் திரளாக பங்கேற்றனர். தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்