உள்ளூர் செய்திகள்

துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்

துபாய்: துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் ஈகைத் திருநாள் 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்களும் தங்களது நண்பர்கள், உறவினர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !