பாத்திமா நாயகியார் பா மாலை மஜ்லிஸ் மற்றும் இப்தார் நிகழ்வு
அபுதாபி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பில் 07/ -03/ -2025 FpfS அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் பரிசுத்த பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ் சிறப்பான முறையில் நடைபெற்றது. அஸர் தொழுகைக்கு பின் 4:30 மணிக்கு பாத்திமா நாயகியார் மாலை மஜ்லிஸ் துவக்கமானது. கண்ணியத்திற்குரிய ஸெய்யதலி மௌலானா, ஆதிப் மௌலானா மற்றும் ஸாமிஸ் மௌலானா முன்னிலை வகித்து, புகழ்மாலையை சிறப்பான முறையில் முன்னின்று ஓதினர். தொடர்ச்சியாக கலிபா முனைவர் அறிவியல் அறிஞர் இஞ்சினியர் இக்பால் பரிசுத்த பாத்திமா நாயகியார் அவர்களின் சிறப்புகளையும், பாமாலையில் வரும் பல நிகழ்வுகளை சுட்டிகாட்டி உணர்வுமிக்க நெகிழ்ச்சியான்ஒரு உரையினை நிகழ்த்தினார். பெருமானர் சல்லலாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் காஃபா முன் தொழும் போது சஸ்ஜ்தாவிலிருந்து எழுந்திருக்க முடியாதவண்ணம் ஒட்டகையின் குடல்களை கழுத்தில் போடுவதும், பத்து வயதில் இருக்கும் மகள் பாத்திமா ரலி ஓடோடி வந்து அவற்றை அகற்றி தந்தையினை கட்டிபிடித்து அழுது ஆறுதல் சொல்வதையும் உருக்கமாக கூறி, பெருமானார் அவர்களுக்கு ஆறுதலாக , நபிகளாரின் கவலை போக்கும் அருமருந்தாக பாத்திமா நாயகி இருந்ததை சுட்டி காட்டினார். கதீஜா நாயகியாரின் சிறப்பினை எடுத்துரைத்த இன்ஜினியர் இக்பால், மக்கா முழுதும் கைக்கு வந்தபிறகு இஸ்லாத்தில் கூட்டம் கூட்டமாக இணைகிறார்கள். இனிமேலும் இசுலாத்திற்கு வராமல் இருந்தால் தங்களுக்கு மதிப்பில்லை என்ற அமைப்பிலும் நீண்ட வரிசை. காருண்ய நாயகரான நபிகளார் அனைவருக்கும் பைஅத் செய்கின்றனர் . இடையில் தூரத்தில் ஒரு பெண்மணியினை பார்த்த நபிகளார் அவர்கள் உடன் அவர்களிடம் சென்று நீண்ட நேரம் பேசி கொண்டிருக்கிறார்கள் . இதனை கண்ட தோழர்களுக்கு ஆச்சிரியம் ஆயிரக்கணக்குகளில் மக்கள் காத்து கொண்டிருக்க நபிகளார் அந்த வயதான பெண்மணியிடம் நீண்ட நேரம் பேச எடுக்கிறார்களே என ! பிறகு வந்த அவர்களிடம் தோழர் உமர் ரலி அவர்கள் , மக்கள் இவ்வளவு காத்திருக்க அந்த வயதான பெண்மணிக்கு ஏன் அவ்வளவு முக்கியம் என்ன உரிமையுடன் கேட்ட போது , உமரே , பொறுமை கொள்ளும் . அவர்கள் என்னரும் மனைவி கதீஜாவின் தோழியர் ஆவார். கதீஜா நாயகியாரின் நினைவுகளை பேசினோம் . அல்லாஹ் இந்த விஷயத்தில் மிக்க திருப்தி அடைந்தான் என கூறினார்கள் . மக்காவின் வெற்றிக்கு பிறகு தோழர் பெருமக்கள் வெற்றிகொடியினை கையில் ஏந்தி நபிகளாரிடம் வந்து , எங்கு நாட்டுவது … கஃபாவிலா, நபிகளார் பிறந்த வீட்டிலா இப்படி இடங்களை குறிப்பிட்டு கேட்ட போது நபிகளார் சற்று மவுனம் கலைத்து கண்களில் நீர் ததும்பி நிற்க தங்கள் அருமை மனைவி நினைவு இடத்தில் கொடியினை நடுங்கள் ; அங்கு மூன்று நாட்கள் தங்க கூடாரமும் அமையுங்கள் என கூறி தங்கள் மகளார் பாத்திமா , மற்றும் அவர்கள் குடும்பத்தாருடன் சென்று கதீஜா நாயாகியாரின் சேவைகளை உடல், பொருள் , ஆவி அணைத்தையும் இசுலாத்திற்கு முழு அர்ப்பணம் செய்திட்ட உயர்வான மனைவியினை நினைவு கூறி நன்றி பாராட்டி அல்லாஹ்விடம் அவர்களின் உயர்வினும் உயர்வான தரஜாவுக்கு துஆ வேண்டினார்கள். மேலும் இக்பால் பேசும் போது நஜ்ரான் கிறித்துவ மதபோதகர்கள் ஈசா நபியினை கடவுளாக சொன்ன போது அல்லாஹ் நபிகளாருக்கு திருகுர்ஆன் மூலமாக 3:61. (நபியே! இது பற்றிய உண்மையான) விளக்கம் உமக்கு வந்த பின்னரும், எவரேனும் ஒருவர் உம்மிடம் இது குறித்து தர்க்கம் செய்தால்; 'வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும், உங்களையும் அழைத்துக்கொண்டு, பிறகு (அல்லாஹ்விடம்) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!' என்று நாம் பிரார்த்திப்போம்!' என நீர் கூறும்.( 3:61). க்ஷபொதுவாக முபாகலா விற்கு செல்லும் போது நபிகளார் தங்களுடன் திண்ணை தோழர்களில் சிலரையோ அல்லது தோழர்கள் எவரெனும் அழைத்து செல்வது வழக்கம் . இந்த திருவசனம் இறங்கியபிறகு தோழர்க்ள மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர் . ஆனால் அந்த முபாஹலாவிற்கு நபிகள் நாயகம் பாத்திமா, அலி, ஹஸன் , ஹூசைன் ரலியல்லாஹூ அன்ஹூம் இவர்களை மட்டுமே அழைத்து கொண்டு செல்கிறார்கள் . பெருமானாரோடு இந்த நான்கு குடும்பத்தினர்களுமாக ஐவர் வருவதை பார்த்த அந்த பாதிரிமார்கள் ,ஒரு விதமான அற்புத ஆன்மீக சக்தி வருவதை கண்ட அவர்கள் இறைவனுடைய சாபத்திற்கு அஞ்சி முபாலாஹா வினை ரத்து செய்து நபிகளாரிடம் பணிந்து இசுலாமிய ஆட்சியினை நஜ்ரானில் ஒத்து கொண்டு முபாலாஹாவில் சரண்டைந்தற்காக இசுலாமிய முறைப்படி காணிக்கை ஆக்கினார்கள் . “நபியின் வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தத்தை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாட்டமாக உள்ளது “( 33:33) . இங்கு நபியின் வீட்டார்கள் என கூறப்படுவது நபிகளாரின் அருமை மகள் பாத்திமா, அலி, ஹசன் , ஹூசைன் ரலியல்லாஹூ அன்ஹீம் இவர்களை தான் நபிகளார் போர்வையில் போர்த்தி கொண்டு அஹ்ல பைத் என கூறி துஆ செய்தார்கள் ! அல்லாஹ்வும் அவர்களை முழுதும் துப்புரவு ஆக்கினான் ! மேலும் அறிவியல் அறிஞர் கலீஃபா இக்பால் பேசும் போது , அலி- பாத்திமா திருமணத்திற்கு பிறகு , நபிகளார் அலி அவர்கள் வீட்டிற்கு அனுப்பும் போது மகள் மீது உள்ள பேரன்பு காரணமாக சிறிது தாமதபடுத்தினாலும் , அனுப்ப வேண்டிய நோரத்தில தாங்களும் சென்று அலி பாத்திமாவை வழி அனுப்பினார்கள்! மகளிடம் எல்லாம் பேசியபிறகு கிளம்பும்போது , ஒருவர் மட்டும்வரமால் பாத்திமாவுடனேயே இருந்தார் . பெருமானார் அந்த பெண்மணி அய்மானிடம் ஏன் தாங்கள் புறப்படவில்லை என கேட்டபோது, கதீஜா பெருமாட்டியார் தாங்கள் வாழும் காலத்தில் தங்களுடைய மகள் திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு செல்லும் போது , நீங்கள் அவர்கள் வீட்டில் செட்டில் ஆகுமவரை உதவி உத்தாசையாக இருக்கணும் என்று தங்களுடைய இறுதி தருணங்களில் கேட்டு கொண்டார் . அவர்கள் உத்தரவுபடியே உள்ளேன் என ௯றியபோது மனம் நெகிழ்ந்து கலங்கினார்கள் பெருமானர்(ஸல்) அவர்கள்! சைய்யத்தில் நிசாவுல் ஆலமீன் ஆகவும் , சொர்க்கத்தின் தலைவயாகவும், ஹவுதர் ஆகவும் வர்ணிக்கபட்ட பாத்திமா நாயகியார் தந்தை மகள் உறவுக்கு அப்பால் உம்முஅபீஹா( தகப்பருக்கு தாய் ) என பெருமானாரால் போற்றப்பட்டார். பாத்திமா நாயகியார் நபித்துத்துவத்தின் நீட்சியாக விலாயத் வேந்தரகளாம் சிறப்பு மிக்க சையது சதாத் வம்சாவழியினை தந்து என்றும் குர்ஆனுடைய ,நபிகளாரின் அகமியங்களை விளக்கிடும் சமூகத்தினை உயிர்பித்து கொண்டே இருப்பார்கள் , அவர்கள் புகழ் பாடுவது ஆன்மாவுக்கு அழகு மருந்து , இதயசுத்தி தரும் என ௯றி இது போன்ற மஜ்லிகளை உலகமெங்கும் நடத்திட அறிவுறுத்தும் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா சையது யாஸீன் அலி மவுலானா அல் ஹஸனி அல்ஹூசைனி நாயகம் அவர்களுக்கு உயரிய நன்றிகளை காணிக்கையாக்கி முடித்தார் . நபிகஇஃப்தாருக்கு முன்பாக காயல்பட்டிணம் முத்து அஹ்மது ஆலிம் துஆவினை ஓதி நிறைவு செய்தார்கள். திருவாவடுதுறை இஞ்சினியர் ஜூபைர் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்கள். நிகழ்வில் அய்மான சங்கத்தின் தலைவர் கீழக்கரை ஜமால் முஹையத்தீன், செயலாளர், பொருளாளர் உள்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும், துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை உறுப்பினர்களும், ஜமாஅத் உலமா சபை தலைவரும், அபுதாபி மௌலித் கமிட்டியின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவருமான மௌலவி அல் ஹாபிழ் காயல்பட்டிணம் SMB ஹூஸைன் மக்கி, லால் பேட்டை ஜமாஅத்தார்கள், காயல் பட்டிணம் ஜமாஅத்தார்கள், மதுக்கூர் ஜமாஅத்தார்கள் உள்பட பல ஜமாஅத்தினர்களும், தமிழக இ.யூ.முஸ்லீம் லீக் மாநில ஆலோசகர் ஆத்ம சகோதரர் எம்.ஜே. அப்துல் ரவூப், இந்த புனித மாதத்திற்காக தாயகத்திலிருந்து வருகை தந்து தினமும் தராவிற் தொழுகை நடாத்தி வரும் மௌலவி அல்ஹாபிழ் அபுதாஹிர் மஹ்ழரி அவர்களும், அபுதாபி மௌலித் கமிட்டியின் நிர்வாகிகள், அங்கத்தினர்கள், ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட சபையினர் அல்லாத பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்வுகள் முழுவதையும் M.A.முஹம்மது ஸாதிக், ஹபிழுர்ரஹ்மான் ஆகியோர் சிறப்பான முறையில் நேரலை (Telecast) செய்தார்கள். விழா ஏற்பாடுகளை செயலாளார் மதுக்கூர் ஜாபர் சாதிக் தலைமையில் அபுதாபி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் நிகழ்வுகளை செய்தார்கள். நிகழ்வில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டு திரளான பெண்களும் கலந்து கொண்டார்கள். சுமார் இருநூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் இஃப்தார் மற்றும் இரவு உணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. - தகவல்: மதுக்கூர் ஜஉபர் ஸாதிக்