குவைத்தில் நடந்த உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
குவைத் : குவைத் இந்தியன் அசோஷியேசன் சார்பில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரி நிகில் குமார் தலைமை விருந்தினராகவும், குவைத் இந்திய பள்ளிக்கூடங்களின் முதல்வர்கள் சி. ராதாகிருஷ்ணன், மகேஷ் பி ஐயர், டாக்டர் அனிஸ் அகமது, ஜசீலா நூபல், டாக்டர் பினுமோன் வாசுதேவ், தன்முனைப்பு பேச்சாளர் பி.எஸ். சர்புதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். பள்ளிக்கூட இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் பாராட்டு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். - நமது செய்தியாளர் காஹிலா