உள்ளூர் செய்திகள்

குவைத்தில் இந்திய டாக்டர்கள் பேரவையின் கலாச்சார திருவிழா

குவைத் : குவைத்தில் இந்திய டாக்டர்கள் பேரவையின் 20வது ஆண்டு விழாவையொட்டி கலாச்சார திருவிழா நடந்தது. இந்த விழாவை இந்திய தூதர் ஆதர்ஸ் ஸ்வைகா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய தூதர், இந்திய டாக்டர்களின் சேவைகளை பாராட்டினார். மேலும் சுகாதார கையேடு குறித்த நூல் வெளியிடப்பட்டது. பாரம்பரிய கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தது. இந்திய டாக்டர்கள் பேரவையின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !