ஏமனில் இந்திய பாரம்பரிய இடங்கள்
ஏடன் : ஏமன் நாட்டின் ஏடன் பகுதியில் இந்திய பாரம்பரிய இடங்கள் உள்ளன. இங்குள்ள பழமையான இந்திய கோவில்கள் உள்ளிட்ட இடங்களை இந்திய தூதர் டாக்டர் சுகெல் கான் பார்வையிட்டார். அந்த பகுதியை சேர்ந்த அதிகாரிகள் தூதருக்கு அங்குள்ள இடங்கள் குறித்து விவரித்தனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய தூதரக அதிகாரி ரிஷி திரிபாதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். - நமது செய்தியாளர் காஹிலா