கத்தாரில் சர்வதேச தொழிலாளர் தினம்
தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இந்திய சமூக நல அமைப்பின் சார்பில் சர்வதேச தொழிலாளர் தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர் விபுல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.கத்தார் நாட்டில் 30 ஆண்டுகளாக வேலை செய்து வரும் 40 தொழிலாளர்கள் நினைவுப் பரிசுவழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் தொழிலாளர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. - நமது செய்தியாளர் காஹிலா