உள்ளூர் செய்திகள்

அஜ்மானில் சர்வதேச யோகா தினம்

அஜ்மான்: ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் இந்தியன் அசோஷியேசனில் 11வது சர்வதேச யோகா தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைவர் அப்துல் சலா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரூப் சித்து வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக இந்திய துணைத் தூதரக அதிகாரி பிஜேந்தர் சிங் கலந்து கொண்டார். அவர் யோகாவின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்த அஜ்மான் இந்தியன் அசோஷியேசன் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !