உள்ளூர் செய்திகள்

திருச்சி ஜமால் முகமது கல்லூரி செயலாளருக்கு ஜெத்தா முன்னாள் மாணவர் சங்கம் வரவேற்பு

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் வசிக்கும் ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ஹாஜி நஜுமுதீன் மற்றும் முனைவர் பாசில் இருவருக்கும் ஜெத்தாவில் மிக உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹாஜி காஜா நஜுமுதீனுக்கு முன்னாள் மாணவர் இஜாஸ் அஹமதுவும், முனைவர் பாசிலுக்கு மூர்த்தி மற்றும் ராமானுஜமும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இஜாஸ் வரவேற்புரை வழங்கினார். ஹாஜி நஜுமுதீன் பேசுகையில், கல்லூரியின் வளர்ச்சி, தற்போது வழங்கப்படும் புதிய படிப்புகள், கல்லூரியின் முன்னேற்றத்தில் முன்னாள் மாணவர்களின் முக்கிய பங்கு ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இறுதியாக மாணவர்களின் கேள்விகளுக்கு ஹாஜி முனைவர் பாசில் பதில் அளித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார். - நமது செய்தியாளர் சிராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்