குவைத் பாரிவள்ளல் நண்பர்கள் மன்றத்தின் 20ஆம் ஆண்டு ஏழை எளியோருக்கு நிதி வழங்கும் விழா.
குவைத் பாரிவள்ளல் நண்பர்கள் மன்றத்தின் சார்பாக ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு, மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள் என பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு வலுசேர்க்கும் விதமாக 31 பயனாளர்களுக்கு 7 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது.முன்னதாக இந்த நிதிவழங்கும் நிகழ்வை நடத்துவதற்காக குவைத்திலிருந்து வருகை தந்த குவைத் பாரிவள்ளல் நண்பர்கள் மன்றத்தின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான டாக்டர் சாமி P வெங்கட் நிதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார், நிதி வழங்கும் நிகழ்ச்சி தலைவர் S. செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது, சிறப்பு விருந்தினர்களாக தனிவாட்டாச்சியர் கருப்பையா, அறந்தாங்கி பார்க்கவகுல சங்கத்தின் நிர்வாகிகள் டாக்டர் சீனிவாசன், ஆர் ஆர் கே மலைக்கக்கண்ணன், தலைமை ஆசிரியர் மதியழகன், பட்டதாரி ஆசிரியர் பூபதி, கராத்தே பிரதர்ஸ் தலைவர் சுப்பிரமணி அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் முனைவர் முபாரக் அலி, விகாஸ் சரவணன், ஆன்டோ பிரவீன், அறந்தாங்கி பிரண்ட்ஸ் ரோட்டரி சங்க தலைவர் வெங்கட், ஜேசிஐ சங்க தலைவர் மணி, வட்டார கல்வி அலுவலர் அருள், சமூக ஆர்வலர்கள் கணபதிராஜா, மற்றும் சங்க உறுப்பினர்கள் சிவலிங்கம், பெருமாள், ரெங்கராஜ் , அர்ச்சுனன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வரும் பாரிவள்ளல் நண்பர்கள் மன்றம் ஏழை எளிய நலிவடைந்த மக்களுக்கு குடும்ப நல உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் இதுவரை 264க்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு ரூபாய் 54 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கணேஷ் மற்றும் தேவா சிறப்பாக செய்திருந்தார்கள்.- நமது செய்தியாளர் செல்லதுரை