உள்ளூர் செய்திகள்

தம்மாம் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழக தொழிலாளர்களுக்கு 800 பேருக்கு நோன்பு திறப்புக்கான உணவுப் பொருட்கள்

சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான தம்மாம் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் விடுதியில் 800 மேற்பட்ட தமிழக தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் தம்மாம் தமிழ்ச்சங்கம் மற்றும் மலபார் நகைக்கடையுடன் இணைந்து ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு துறப்பிற்கு தேவையான 800 உணவு பொட்டலங்களை தம்மாம் துறைமுகம் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் விடுதியில் விநியோகிக்கப்பட்டது மலபார் நகைகடையின் சார்பாக வழங்கப்பட்ட இந்த உணவு பெட்டகத்தில் சிக்கன் மந்தி, பேரிச்சம் பழம், மோர், மற்றும் தண்ணீர் பாட்டில் இருந்தன. இந்நிகழ்வை தொழிலதிபர் பத்ருதீன் அப்துல் மஜீத், மலபார் நகைக்கடையின் ஜியாத், தம்மாம் தமிழ்ச்சங்கத் தலைவர் முஹம்மது நூஹ் துவக்கி வைத்தனர். சவூதி தமிழ் கலாச்சார மையத் தலைவர் ரஹ்மத்துல்லா, மூத்த ஆலோசகர் சரவணன் ராமதாஸ், தொழிலாளர் விடுதி பொறுப்பாளர் ரிஜ்வான், மேலாளர் ரஹ்மத்துல்லா முன்னிலை வகித்தனர் இந்த சிறப்புமிகு இப்தார் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தம்மாம் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் சரவணன் பெரியசாமி தலைமையில் நெல்சன், பூவரசன், கார்த்திக், இம்மானுவேல், நரிப்பையூர் இலியாஸ், சபீக்குர் ரஹ்மான், பக்ருத்தீன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.- நமது செய்தியாளர் முஹமது ரஹ்மத்துல்லா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !