உள்ளூர் செய்திகள்

துபாய் இந்திய துணை தூதரகத்தில் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம்

துபாய் : துபாய் இந்திய துணை தூதரகத்தில் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு இந்திய துணை தூதர் சதீஷ் குமார் சிவன் தலைமை வகித்தார். அவர் முகாமில் பங்கேற்க வருகை தந்தவர்களிடம் இருந்து அவர்களது பிரச்சனைகளை கேட்டு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இந்த குறைதீர்க்கும் முகாமையொட்டி தொழிலாளர் மற்றும் நலத்துறை உள்ளிட்ட ஒவ்வொரு துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் தனித்தனியே பொதுமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர். இந்த முகாமில் பாஸ்போர்ட், விசா, கல்வி, பணிப்பெண் தொடர்பான பிரச்சனைகள், வர்த்தகம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறினர். இந்திய துணை தூதரகத்தில் இருந்து சேவைகளை தவிர சட்டரீதியான பிரச்சனைகள் குறித்து வழக்கறிஞர்கள் பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்