உள்ளூர் செய்திகள்

சவூதி அரேபியா கிழக்கு மாகாண அயலக அணியின் கலந்தாய்வு கூட்டம்

சவூதி அரேபியா கிழக்கு மாகாண அயலக அணியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் கோபார் நகரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை அயலக அணி கிழக்கு மாகாண அமைப்பாளர் எஸ்.கே.எஸ்.சிக்கந்தர் பாபு தலைமையில், துணை அமைப்பாளர் திருச்சி குண்டு பிலால், இளைஞர் அணி செயலாளர் அஷ்ரஃப்தீன், மகளிர் அணி செயலாளர் பரிதா பானு முன்னிலையில் நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் சிவகுமார், ஆனந்தராஜ், ராபர்ட், இம்ரான், வினோத், தௌலத், சபர்மதி, மற்றும் நிஹார், அஜ்மல், சலாவுதீன், சையத் அலி, சுல்தான், அப்துல் பாசித், சவுதி வாசி ரஃபி, ஜின்னா, சிவா, கலீஃபா, அசார், நிசார், ரியாஸ், ஃபஹத், முகமது சேத்தப்பா, பீர் முகமது, சகாயராஜ் சத்யராஜ், சோழராஜன், ராஜேஷ், சதாம், முகமது ரவூஃப், அஹ்மத், மர்ஜூன், ரியாஸ், மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். - நமது செய்தியாளர் M Siraj


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !