பஹ்ரைன் இந்திய தூதரகத்தை பார்வையிட்ட பள்ளிக்கூட மாணவியர்
பஹ்ரைன்: பஹ்ரைன் இந்திய தூதரகத்தை அல் துரஸ் பெண்கள் பள்ளிக்கூட மாணவியர் பார்வையிட வருகை புரிந்தனர். அவர்களை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப், பள்ளிக்கூட மாணவியரிடம் இந்திய தூதரகத்தின் பல்வேறு சேவைகள் குறித்து விவரித்தார். அதனையடுத்து இந்திய தூதரகத்தின் பல்வேறு பகுதிகளையும் மாணவியர் பார்வையிட்டனர். அவர்களுக்கு அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியில் நடைபெறும் பணிகள் குறித்து விளக்கி கூறினர். - நமது செய்தியாளர் காஹிலா