சவுதி அரேபியா யான்புவில் சமூக நல்லிணக்க கருத்தரங்கம்
யான்பு பலத் அல்ஹிக்கி ஹோட்டலில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) யான்பு மண்டலம் சார்பாக வரலாற்று சிறப்புமிக்க சமூக நல்லிணக்க கருத்தரங்கம் பந்தநல்லூர் ஷாஜஹான் தலைமையில் நடைப்பெற்றது. சகோ. ஷபிக்குர்ரஹ்மான் கிராஅத் ஓதினார். அடியற்கை சேக்தாவுது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பாளை அனிஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். ஏர்வாடி அன்சாரி, உடன்குடி செய்யது அபுபக்கர் சித்திக், ஶ்ரீவை இமாம் காதர் நியாஸ், ராமநாதபுரம் அபூதாஹிர், கட்டிமேடு அன்புதீன், ராமநாதபுரம் இலியாஸ், சென்னை சென்னை ரபீக், வி. களத்தூர் ஜியாவுல் ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.அப்துல் சமது சிறப்புரையாற்றி, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதிலளித்தார். அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தஞ்சை முஹம்மது ஷாஜஹானின் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிவுற்றது. யான்பு வாழ் தமிழ் மக்கள் பெருமளவு கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். - தினமலர் வாசகர் ஷாஜஹான்