ரியாத் பள்ளிக்கூடத்தில் சிறப்பிடம் பெற்ற தமிழக மாணவர்
ரியாத் : சௌதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அல் யாஸ்மின் சர்வதேச பள்ளிக்கூடத்தில் சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முஹம்மது ஹசிஃப் 94.2 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கூட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை மீரான் தகவல் தொழில் நுட்ப துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பள்ளிக்கூட முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். -நமது செய்தியாளர் காஹிலா