உள்ளூர் செய்திகள்

ரியாத்தில் T20 லீக் கிரிக்கெட் போட்டி

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் நடந்தது. சவூதி அரேபியா தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத் கிரிக்கெட் லீக் நடத்திய T20 இருபது ஓவர் கிரிக்கெட் பால் லீக் போட்டிகள் நடந்தன. கடந்த ஏப்ரல் 11 முதல் மே 29 வரை நடைபெற்ற போட்டியில் மொத்தம் 15 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன. இதில் இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டின் அதிராம்பட்டினம் பகுதியைச் சார்ந்த வீரர்கள் அதிரை ARCC அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. அதனைத் தொடர்ந்து அந்த அணியின் யூசுஃப் சிறந்த ஆல் ரவுண்டராக பதக்கத்தையும், தவ்ஃபீக் சிறந்த பேட்ஸ்மேன் பதக்கத்தையும், ஜுபைர் இறுதிப் போட்டியில் சிறந்த பந்து வீச்சாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாஜித் தலைமையில் அதிரை அணி கோப்பையை வென்று சொந்த ஊரான அதிராம்பட்டின த்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற அணியினரையும், சிறப்பாக செயல்பட்டு சாதனைகளை செய்த விளையாட்டு வீரர்களையும் செங்கடல் தமிழ்ச் சமூகம் பாராட்டியது. - நமது செய்தியாளர் M Siraj


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்