உள்ளூர் செய்திகள்

ஜெத்தாவில் தமிழ் இசை மாலை

கடல் கடந்து வாழும் அயலக தமிழ் மக்களை ஒன்றிணைத்து, வேலைப் பளுவுக்கு இடையே வருகின்ற மன உளைச்சல்களை களையும் விதத்தில் மக்களை மகிழ்விக்க ஜெத்தா 3 ஸ்டார் குழு முன்னெடுத்த நிகழ்ச்சியான தமிழ் இசை பாடல்கள் நிகழ்ச்சி ஷரஃபியா சென்னை எக்ஸ்பிரஸ் உணவக அரங்கத்தில் நடைபெற்றது. வார விடுமுறையை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். நிகழ்ச்சியை ஜெத்தா கேரளா சமூக புகழ் பாடகர் நூஹ் பீமா பள்ளி, செங்கடல் தமிழ்ச் சமூக நிர்வாகிகள் குலாம் முஹைதீன் மற்றும் தஞ்சை ஜாஹிர் ஹுசைன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். சிறப்பு அழைப்பாளர்களாக அயலக (NRTIA) மேற்கு மண்டல அமைப்பாளர் S.எழில் மாறன், துணை அமைப்பாளர் ஜாஹிர் ஹுசைன், மற்றும் KIA நாசர், அப்துல் காதர், ஹஸன் கொண்டொட்டி, வாசு, சுப்பையா, ராமச்சந்திரன் மற்றும் ஜெத்தா தமிழ்ச் சங்க நிர்வாக உறுப்பினர் ரமண சங்கர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ்த் திரை இசைப் பாடல்கள் மட்டும் ரசிகர்கள் விருப்பத்திற்கேற்ப பாடப்பட்டன. நிகழ்ச்சியில் S.எழில் மாறன், மற்றும் ஜாஹிர் ஹுசைனைக் கௌரவப்படுத்தினர். நூஹ் பீமாபள்ளி, மக்காஹ் நாசர், ரம்யா புரூஸ், முனீர், ஜாஹிர், எழில் மாறன், டிக் டாக் பாடலகர் சமீர், அசீர் கொல்லம் மற்றும் சிறுமிகள் பாடல்களைப் பாட, சிறுமிகளின் நடனங்களும் இடம் பெற்றன. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சி கலந்து கொண்டவர்கள் பாராட்டு தெரிவித்ததோடு, தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.- நமது செய்தியாளர் M Siraj


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !